பொது
இடத்தில் சிறுநீர் கழித்த நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அபாரதம்
விதித்துள்ளது. கொழும்பு பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இந்த
அபராதம் விதிக்கப்பட்டது. கோட்டையில் பழைய டச்சு வைத்தியசாலை கட்டித்
தொகுதியிலுள்ள உணவு விடுதியொன்றிற்கு அருகில் இந்நபர் சிறுநீர் கழித்ததாக
குற்றம் சுமத்தப்பட்டார்.
பொதுமக்களுக்கு தொல்லையேற்படும் வகையிலும், அருவருப்பான வகையிலும் நடந்துகொண்டார் என பொலிஸார் இவர் மீது குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
குற்றத்திற்காக நபரொருவர்
கைதுசெய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று
ஆஜர்படுத்தபட்டார். அந்நபரை 50 ரூபா அபராதம் செலுத்துமாறு நீதவான்
உத்தரவிட்டார்.
கைதுசெய்யப்படும் போது இந்த நபர்
மதுபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் கட்டளைச் சட்டம் 62 (ஜே-1) பிரிவின்
கீழ் இவர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்ட இவருக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன 50 ரூபா அபராதம்
விதித்து தீர்ப்பளித்தார்.