
பாடசாலை
மாணவர்கள் போதைக்காக, ஒருவகை ஹெயார் ஜெல்லை உட்கொண்டுவருகின்றமை
அவதானிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்
திபாலி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த வகை ஹெயார் ஜெல்லில் ஹெல்கஹோல்
உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனை உட்கொள்வதால் போதை ஏற்படுகிறது. அத்துடன்
உட்கொள்பவர்கள் சுயநினைவையும் இழக்கின்றனர் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களும், பெற்றோரும் இதுகுறித்து
அவதானமாக இருக்க வேண்டும் எனவும், பிள்ளைகளதும், மாணவர்களதும்
செயற்பாடுகளை அனைத்தையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் அந்த
மருத்து நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார்.