![]()
ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தினை வெளிப்படுத்தும் பணவீக்கம், வட்டி வீதம், நாணய மாற்று வீதம், வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு நாணய ஒதுக்கு மற்றும் பங்குச் சந்தை நிலவரம் ஆகிய குறிகாட்டிகள், இலங்கைப் பொருளாதாரத்தின் இன்றைய நிலைமை தொடர்பாக பாதக நிலையினை சமிஞ்யை செய்துள்ளன.
உள்நாட்டுப் போர் ஓய்ந்த பின்னர் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி
மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பில் கடந்த சில வருடங்களாகவே நல்ல நம்பிக்கை
காணப்பட்டு வருகின்றது. எனினும், அண்மைக் காலமாக மேற்படி பொருளாதார
குறிகாட்டிகள் பொருளாதார உறுதிப்பாடு, உயர் வருமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும்
வாழ்கைத் தரம் போன்றன பாதக நிலையினை நோக்கி நகர்வதனை
வெளிப்படுத்துகின்றன.
இதனால், ஏற்கனவே எதிர் பார்க்கப்பட்டது போல இந்த ஆண்டின் பொருளாதார
வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு குறைவடையும் அதேவேளை, அதிகரித்து வரும்
வாழ்க்கைச் செலவீனங்களால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும்
மோசமடையும் என பொருளியலாளர்கள் எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|