
இந்த மோசடித் திட்டத்தை முன்னெடுத்த 8
சந்தேக நபர்களை அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். பொலன்னறுவை
ஹதருஸ்கொட்டுவ பிரதேசத்திலேயே இந்த மோசடித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, ஹதருஸ்கொட்டுவ பிரதேசத்தில்
ஒரு இரகசியமான இடத்தில் இரண்டு எண்ணெய்த் தாங்கிகளிலிருந்து (எண்ணெய்
பௌசர்கள்) பெட்ரோலை களவாடிவிட்டு அதற்குப் பதிலாக மண்ணெண்யை
நிரப்பப்பட்டுள்ளது.
இன்று (09) பிற்பகல் குறித்த இடத்தை
சுற்றிவளைத்த அதிரடிப்படையினர் எண்ணெய் தாங்கிகளிலிருந்து பெட்ரோல்
அகற்றப்படுவதை அவதானித்துள்ளனர். பெட்ரோல் அகற்றப்பட்டதை அடுத்து மிகவும்
சூட்சுமமான முறையில் இருந்ததைப் போலவே பௌசர்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
பௌசர்களிலிருந்து களவாடப்படும்
பெட்ரோலுக்குப் பதிலாக மண்ணெண்யைக் கலந்து குருணாகல், அநுராதபுரம்,
பொலன்னறுவை, தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு
நிலையங்களுக்கு கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோலை இந்தக் கும்பல்
விநியோகித்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.