5ஆயிரம்
கிலோ மீற்றர் வரை சென்று கண்டம் விட்டு கண்டம் தாவும் வல்லமை கொண்ட அக்னி ஏ
ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையால்
சீனா முழுவதையும் இந்த ஏவுகணையின் தாக்குதல் வளையத்தின் கீழ் கொண்டு வர
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னி ஏ ஏவுகணை 3 அடுக்குகளைக் கொண்டது,
அதன் உயரம் 17 மீட்டர் ஆகும். 5ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க
கூடியது. அணு ஆயுதங்களையும் தாங்கிச் செல்லக் கூடிய திறன் கொண்டதாக அக்னி
வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை
உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே
வைத்துள்ளன.
அக்னி ஏ ஏவுகணையின் மூலம் சீனா உட்பட
ஐரோப்பாவின் பல நாடுகளையும் கூட தாக்க முடியும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய சோதனையைத் தொடர்ந்து அடுத்த ஓராண்டில் இதுபோன்ற மேலும் சில சோதனைகளை
செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3,500 கிலோ மீற்றர்
தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக
பரிசோதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.