சர்வதேச
நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்.) நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவே நிதி
மற்றும் திட்டமிடல் அமைச்சினால் அறிவிக்கப்பட்ட வரி அதிகரிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொருளியலாளரும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினருமான
கலாநிதி ஹார்ஷா டி சில்வா கூறியுள்ளார்.
'சர்வதேச நாணய நிதியத்தின் சபைக்கூட்டம் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள கடன் விவகாரம் அக்கூட்டத்தின்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இடைநிறுத்தப்பட்ட இந்த பணத்தை பெறுவதற்கு அரசாங்கம் கடுமையாக முயற்சிக்கிறது.
இதற்காக பொருட்களின் விலைகளை அதிகரித்தல், வட்டவீதங்களை அதிகரித்தல், நாணய மதிப்பிறக்கம் உட்பட பல விடயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த வரி அதிகரிப்பானது திங்கட்கிழமை நடைபெறவுள்ள ஐ.எம்.எவ். கூட்டத்திற்காக தயார் படுத்தப்பட்டதைப் போல் தென்படுகிறது' என ஹார்ஷா டி சில்வா கூறினார்.