இலங்கையில் இவ்வருடம்
ஆரம்பித்து, மூன்றரை மாதங்களிற்குள், நாட்டில் 730 பேர்
எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் இந் நோய் தாக்கத்திற்கு
உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய்
ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
எலியின் சிறுநீரிலிருந்து பரவும்
"லெப்டோரஸ்பை ரோஸில்" என்றழைக்கப்படும் எலிக்
காய்ச்சல் நோய்தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக மக்களை இருக்கும்படி சுகாதார
அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
வீட்டுச்சூழலை எலிகள் இன்றி சுத்தமாக
வைத்திருப்பதோடு வயல்கள்,சதுப்பு நிலங்கள் வாய்க்கால்கள் மற்றும் நீர்
தேங்கியுள்ள இடங்களிற்கு செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு
சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,உடற்பகுதியில், மற்றும்
கால்களில் காயங்கள் ஏதும் காணப்பட்டால்,குறிப்பிட்ட இடங்களிற்கு செல்வதனை
தவிர்க்குமாறும்,அல்லது இவ்வாறான இடங்களில் சிறுவர்கள் விளையாடும் போது
மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுகொள்ளப்படுகின்றது.
இதேவேளை காய்ச்சல்,தலைப்பிடிப்பு
மற்றும் கண்கள் கடுமையாக சிவப்படைதல் ஆகிய அறிகுறிகள் காணப்பட்டால்
உடனடியாக அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு
வேண்டுகோள் விடுத்துள்ளது.
|
இலங்கையில் எலிக்காய்ச்சல் தாக்கம் அதிகரிப்பு ; மக்களை அவதானமாக இருக்கும்படி சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Labels:
அறிவிப்புகள்,
இலங்கை