தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நாட்டுக்கு எதிராக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற
விவாதத்தின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு
எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறு அமெரிக்காவைத் தூண்டியதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாவதன் மூலம் நாட்டு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து எவ்வாறான நிலைப்பாட்டை உருவாக்கிக்கொள்வர் என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் அண்மையில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்காக அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு கூட்டமைப்பு தடை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பரிந்துரைகளின் அனைத்துமே அமுல்படுத்தப்படும் என உறுதியளிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


