இந்தக் கலந்துரையாடல்களில் இரு தரப்பு அரசியல், பொருளாதார மற்றும் கலாசாரத்துறை உறவுகளை வலுப்படுத்துவதன் தேவை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீனத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்புக்கு பலஸ்தீன ஜனாதிபதி மஹமூத் அப்பாஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னேற்றப் பாதை குறித்து தாம் மகிழ்சியடைவதாக பலஸ்தீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் எதிர்காலம் மிகவும் செழிப்பாக அமையும் என மஹமூத் அப்பாஸ் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.