இளம் பெண்ணை பலாத்காரம் செய்த 10 மாணவர்களுக்கு விளக்கமறியல்


18 இளம் பெண்யொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 10 மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


கம்பஹாவைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களே கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த எட்டாம் திகதி வெசாக் பந்தல்களை பார்வையிட காலி முகத்திடலுக்கு வந்திருந்தபோது இந்த மாணவர்கள் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கோட்டை பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கைதாகியுள்ள மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு சந்தேகநபர் சார்பில் அஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

எனினும், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், மாணவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now