இறுதிப்
போர் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை முழுமையாக அகற்ற மேலும்
சில ஆண்டுகள் தேவைப்படும் என மனித நேய கண்ணிவெடி அகற்றும் தேசிய
ஒன்றியத்தின் தலைவர் மொன்டி ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒருநாளைக்கு சுமார் 6 முதல் 8 வரையான சதுர
மீற்றர் பரப்பில் உள்ள கண்ணிவெடிகளை ஒருவரால் அகற்ற முடியும். எனவே இதற்கு
இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும் என அவர் தெரிவித்தார்.
புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளே முழுமையாக
அகற்ற இன்னும் 8 ஆண்டுகள் வரை செல்லும் என இலங்கை கண்ணிவெடி அகற்றும்
வேலைத்திட்டத்தின் இணைப்பாளர் பிரசன்ன குருபோம தெரிவித்தார். அதாவது
2020ஆம் ஆண்டே கண்ணி வெடி அகற்றும் பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் 90 வீதமான கண்ணிவெடிகள்
அகற்றப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் 124 சதுர கிலோமீற்றர் பரப்பளவில்
புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளே ஏனைய 10 வீத பிரதேசத்துக்குள்
அடங்குகின்றன.
அனைத்துப் பிரதேசங்களிலும் இயந்திரங்களைப்
பயன்படுத்தி கண்ணிவெடிகளை அகற்ற முடியாது. இறுதிப் போர் இடம்பெற்ற
பிரதேசத்திலும் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது.
அதனால் மனித சக்தியைப் பயன்படுத்தியே அவற்றை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.