
முச்சக்கர வண்டியொன்றில் சாரதியுடன் மேலும் மூன்று பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, விபத்துக்கள் ஏற்படின் அதிகளவிலான பாதிப்புக்கள் ஏற்படுமென அவர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு மட்டுமல்லாது உரிமையாளருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
விபத்துக்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து, இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துக்களால் 35 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.