ஐ.பி.எல் 5ன் இறுதிச் சுற்றுக்கான டிக்கெட் விலை குறைப்பு ஏன்?


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள ஐ.பி.எல் பிளே- -ஆப் மற்றும் இறுதிச் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.
ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி- 20 கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பாக நடந்து வருகிறது.
இதன் பிளே ஆப் சுற்றின் இரண்டாவது ஆட்டம் வரும் 25ஆம் திகதியும், இறுதிச் சுற்று 27ஆம் திகதியும் சென்னையில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் சென்னை மைதானத்தில் 7,000 ரசிகர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள மூன்று கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ) அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் இறுதிப்போட்டி வேறு மாநிலத்திற்கு இடம் மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி இறுதிப்போட்டி சென்னையில் நடப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது. இதுவரை சென்னையில் நடந்த எட்டு போட்டிகளுக்கும் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சென்னை அணியின் பிளே-ஆப் வாய்ப்பு மங்கியதால், குறைந்தபட்ச டிக்கெட் கட்டணத்தில் தற்போது 200 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேலரிகளுக்கான குறைந்தபட்ச டிக்கட் கட்டணமாக 500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. அதற்கடுத்துள்ள 1,200ரூபாய்க்கான டிக்கெட் கட்டணமும் நேற்று அதிரடியாக குறைக்கப்பட்டு 750 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதேபோல மற்ற ஸ்டாண்டுகளின் டிக்கெட் கட்டணமும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னையில் நடந்த பெரும்பாலான போட்டிகளை காண்பதற்கு குறைந்த அளவிலேயே ரசிகர்கள் கூட்டம் வந்தது. கூட்டத்தை அதிகரிப்பதற்காகவே டிக்கெட் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சி.எம்.டி.ஏ அனுமதிப்பெற்று பூட்டி கிடக்கும் கேலரிகள் விரைவில் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் தான் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now