
இதன்போது முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது. அத்துடன், வெற்றிக்கான 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த அணிவகுப்பில் முப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 854 அதிகாரிகள் உட்பட 12 ஆயிரத்து 828பேர் பங்குபற்றினர்.இவர்கள், கிழக்கு, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் என மூன்று முன்னணிகளாக அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
அத்துடன், யுத்தத்தின்போது காயமடைந்த படைவீரர்களில் 200பேர் இந்த அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.இராணுவத்தின் யுத்த வாகனங்கள், பல்குழல் பீரங்கிகள், பொறியியல், சமிக்ஞை பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 148 வாகனங்களும் இந்த அணிவகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
அத்துடன், கடற்படையைச் சேர்ந்த 72 படகுகள், விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகொப்டர்கள் உள்ளடங்களான 32 விமானங்கள் அணிவகுப்பின் போது சாகசங்களைக் காண்பிக்கவுள்ள அதேவேளை, கமாண்டோ படையணியின் 22 பரசூட்களும் விசேட படையணியின் மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.