அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையின் கீழ் முஸ்லிம் கவுன்ஸில் மற்றும்
முஸ்லிம் சிவில் அமைப்புகள், சங்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே குரலில்
இயங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய
கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது.ஜம்இய்யதுல் உலமாவின் முக்கியஸ்தர்கள், முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை வழங்கினர். முஸ்லிம்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு ஒருமித்த குரலில் பேசுவதற்கும் சரியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இவ்வாறான அமைப்பு அவசியம் என வலியுறத்தப்பட்டது.
இந்த முயற்சிக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பைப் பெறுவதெனவும் முஸ்லிம் தலைவர்களின் ஆலோசனையை உள்வாங்கி இந்த அமைப்பை வலுப்படுத்துவது பற்றியும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

