அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் உளவு பார்த்ததாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்கச் செலயாளர் ஹிலாரி கிளின்ரன், உளவுப் பணிகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளது என திவயின செய்தி வெளியிட்டுள்ளது