
கடந்தாண்டு
இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டையில் நடந்த உலக கிண்ண லீக் போட்டியில்
பாகிஸ்தான் அணி(317/7), கென்யாவை(112), 205 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
வீழ்த்தியது.
இதில்
கென்யா சார்பில் 37 வைடுகள் வீசப்பட்டன. இது பற்றி சந்தேகம் எழுந்தது. சில
வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என புகார் கூறப்பட்டது.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) சார்பில் கென்ய வீரர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட
வீரர் தற்போது கென்ய அணியில் இடம் பெறாததால், சஸ்பெண்ட் செய்ய வேண்டிய
அவசியமில்லை. இவருக்கு அதிகாரப்பூர்வமாக கென்ய கிரிக்கெட் போர்டு எந்த
பதவியும் அளிக்கக் கூடாது என ஐ.சி.சி அறிவுறுத்தியுள்ளது.
இது
குறித்து கென்ய கிரிக்கெட் போர்டு தலைவர் டாம் சியர்ஸ் கூறுகையில்,
விசாரணை நடப்பது உண்மை தான். ஐ.சி.சி.க்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்றார்.
ஐ.சி.சி
செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஐ.சி.சி ஊழல் தடுப்பு மற்றும்
பாதுகாப்பு மையத்தின் நடவடிக்கைகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க
கூடாது என்றார்.