
ஐந்தாவது
ஐ.பி.எல் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆப் சுற்றின் முதல்
போட்டியில் கொல்கத்தா அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை
வீழ்த்தி, முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இதுகுறித்து
முன்னாள் கொல்கத்தா அணித்தலைவர் கங்குலி கூறியதாவது, எனது ஆறாவது அறிவு
கூறியபடி கொல்கத்தா அணிக்கு இம்முறை ஐ.பி.எல் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு
பிரகாசமாக உள்ளது. இதற்கான அனைத்து தகுதிகளும் கொல்கத்தா அணிக்கு உள்ளது.
கிரிக்கெட்
என்பது ஒரு வட்டம். இம்முறை ஒரு அணி கிண்ணத்தை வெல்லும், அடுத்த முறை வேறு
ஒரு அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். இம்முறை கடைசி இடம் பிடித்த புனே
வாரியர்ஸ் அணி, அடுத்த தொடரில் கிண்ணத்தை வெல்லலாம்.
கொல்கத்தா அணியில் சுனில் நரைன் இருப்பது சாதகமான விஷயம். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு நரைனின் பங்களிப்பு முக்கிய பங்குவகிக்கிறது.
இவருக்கு
தொடர் நாயகன் விருது வழங்கலாம். இக்கட்டான நேரத்தில் பந்துவீசும் இவர்,
எதிரணி துடுப்பாட்ட வீரர்களின் மனநிலைக்கேற்ப பந்துவீசி நெருக்கடி
கொடுக்கிறார்.
இந்திய
அணியின் துணை அணித்தலைவர் பொறுப்பில் இருந்து காம்பிர் நீக்கப்பட்டதற்கு
பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஐ.பி.எல் தொடர் மூலம் சிறந்த
அணித்தலைவர் என்பதை நிரூபித்துள்ளார் என்று தெரிவித்தார்.