அமைச்சர் மேர்வின் சில்வாவினால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் லஞ்சம்,
ஊழல், கப்பம் என்பவற்றை கருத்திற் கொண்டு களனி ஆசனத்தில் இருந்து அவரை
விரட்டும்படிக் கோரி களனி விகாரையில் இன்று (16) தேங்காய் உடைத்து
பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தில் 500ற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றுகூடி இவ்வாறு தேங்காய் உடைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் களனி பிரதேச சபை தலைவர், உப தலைவர் உள்ளிட்ட அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான பலர் கலந்து கொண்டனர்.


