
நாட்டில்
இனவாதத்தை போஷிக்கும் பொறுப்பினை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக
காலணித்துவ எதிர்ப்பு தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில
தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில்
இனவாதம் வளர்வதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட ஆட்சியாளர்கள் பொறுப்பு சொல்ல
வேண்டும். நாட்டு மக்களின் மொத்த உரிமைகளையும் வெளிவிவகார அமைச்சர்
ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரனிடம் அடகு
வைத்துள்ளார்.
நாடு அரசியல் ரீதியாக பலவீனமடைந்துள்ளது. காலணித்துவ சக்திகளுக்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது.
நாட்டில் இன
மற்றும் மாதவாதம் தலைதூக்க அரசியல் தலைவர்களே காரணம். இதனைத் தடுத்து
நிறுத்த ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத்
தவறியுள்ளனர்.
வெளிவிவகாரக்
கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளே நாட்டுக்குள் காலணித்துவ சக்திகள் ஊடுருவக் காரணம்
என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.