தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேள்வி:- உங்கள் கூட்டணி கட்சியான தி.மு.க. இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்பதற்காக ‘டெசோ’ அமைப்பு ஆரம்பித்துள்ளதால் கூட்டணி உறவு பாதிக்குமா?
பதில்:- இதனால் தி.மு.க. - காங்கிரஸ் உறவு பாதிக்காது. இலங்கை பிரச்சினையில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அணுகுமுறையை கையாள்கிறது. இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பதை கைவிடவேண்டும் என்று இங்குள்ள தலைவர்களை கெஞ்சி கேட்கிறேன். ஏனென்றால் இலங்கையில் தற்போது தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வேகமாக ராஜபக்ஷ அரசு செய்து வருகிறது.
தனி ஈழம் கோரிக்கை மீண்டும் வலுப்பெறும்போது அது தமிழர்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்காது என்பதுதான் எனது கருத்தாகும். தமிழர்களுக்கு பாதகமாகத்தான் இந்த கோரிக்கை அமைகிறது.