சீனி விஷத்தன்மை வாய்ந்தது – ஆய்வறிக்கை தகவல்


அக்கட்டுரையில் போசணைக் குறைபாட்டை விட உடற்பருமன் அதிகரிப்பானது மிகப் பெரும் சவாலாக உள்ளதாகவும் இதில் சீனி முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


சிகரெட், மதுபான வகைகள் போன்று சீனியையும் கட்டுப்படுத்த வழிசெய்ய வேண்டுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கட்டுப்படுத்த வரிவிதித்தல் உட்பட பல சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உடல் எடை அதிகரித்தல், இருதய நோய், புற்றுநோய், ஈரல் நோய்களுக்குக் காரணமாக சீனி சேர்க்கப்பட்ட உணவு, பானங்கள் அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இது உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 35 மில்லியன் மரணங்களுக்குக் காரணமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் ‘The Toxic Truth About Sugar’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டுமன்றி சீனியானது மனித உடலின் பரிமாண மாற்றத்தைப் பாதிப்பதுடன், ஹோர்மோன்களின் சீரற்ற சுரப்புக்கும், உயர் குருதி அமுக்கத்துக்கும் காரணமாக அமைவதாக அக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now