முன்னாள்
இராணுவத் தளபதி இந்த வாரத்தில் விடுதலை செய்யப்படுவார் என ஜனநாயக தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று அலரி
மாளிகையில் சந்தித்து, சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதில் உள்ள
பிரச்சினைகள் குறித்து பேசியதாக டிரான் அலஸ் கூறினார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவை விடுதலை
செய்வதற்கு ஜனாதிபதி தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக
சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமது ஸ்ரீலங்கா மிரர் இணையத்திற்கு தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்டால் அரசியலில் ஈடுபடக்
கூடாது என்ற நிபந்தனை இதில் உள்ளடங்குவதாகவும், எவ்வாறெனினும், இன்று
நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சரத் பொன்சேகா விடுதலை குறித்து
பேசப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.