பாகிஸ்தானில் டுவிட்டருக்கு தடை!


இஸ்லாத்தை அவமதிக்கும் விடயங்களை அகற்ற மறுத்த காரணத்தால், டுவிட்டர் இணையத்தளத்தை தாம் தடை செய்வதாக பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமது நபியை உருவங்களின் மூலம் குறிப்பிடுவதை முஸ்லிம்களால் மத நிந்தனையாகக் கருதும் நிலையில், டுவிட்டரில் வந்த ஒரு கேள்வி, அவருக்கு ஒரு உருவப்படத்தை பேஸ்புக்கில் பரிந்துரைப்பதை போட்டியாக ஊக்குவித்திருந்தது. அந்தப் போட்டி குறித்த கரிசனைகளை கவனத்தில் எடுக்க பேஸ்புக் ஒப்புக்கொண்டிருந்ததாகவும், டுவிட்டர் அதற்கு உடன்படவில்லை என்றும் பாகிஸ்தானிய தொலைத்தொடர்புத்துறையின் தலைவரான முகமட் ஜசீன் கூறியிருந்தார்.அந்த விடயங்கள் அகற்றப்படும் போது அந்த இணையதளத்துக்கான தடை நீக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now