
ஆப்கானிஸ்தான்
ராணுவ சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் தீவிரவாதிகளை அமெரிக்கா ரகசியமாக
விடுவித்து வருகிறது. இதனால் தலிபான்களுடன் நடந்து வரும் அமைதி பேச்சில்
முடிவுக்கு வருவது சந்தேகம்தான் என்று தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை
செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க, அமெரிக்கா தலைமையிலான
நேட்டோ படையினர் முகாமிட்டுள்ளனர். அவர்கள் மீது தீவிரவாதிகள் தொடர்ந்து
தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் பலரை அமெரிக்க படையினர் கைது
செய்து இங்குள்ள ராணுவ சிறைகளில் அடைத்துள்ளனர். இந்த சிறைகள்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில்,
ஆப்கனை விட்டு அமெரிக்க படைகளை வெளியேறவும், பாதுகாப்பு பொறுப்பை ஆப்கன்
ராணுவத்திடம் ஒப்படைக்கவும், அதேநேரத்தில் தலிபான்களுடன் அமைதி பேச்சும்
நடத்தப்பட்டு வருகிறது. இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை. ஆனால்,
சிறைகளில் உள்ள தலிபான் தீவிரவாதிகளை ரகசியமாக அமெரிக்கா விடுவித்து
வருகிறது.
இது
தலிபான்களுடன் நடத்தி வரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு எந்த அளவுக்கு
உதவும் என்று தெரியவில்லை என்று வாஷிங்டன் போஸ் கூறியுள்ளது. மேலும்,
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தலிபான் தீவிரவாதிகள் பலர்
முக்கியமானவர்கள். அவர்கள் மீண்டும் ஆயுதங்களை கையிலேந்தும் அபாயம் உள்ளது
என்று எச்சரித்துள்ளது.
