![]()
எதிரி நாடுகளின் ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணை சோதனையை
இந்தியா வெற்றிகரமாக செய்து பார்த்தது. இதன் மூலம் இதுபோன்ற வசதியை
பெற்றுள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
|
சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை
இடையிலேயே வழி மறித்து அழிக்கும் சோதனையை டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக சோதனை
செய்து பார்த்தது. இப்பாதுகாப்பு ஏவுகணை மேலும் 5000 கிலோ மீட்டர் அளவிற்கு
சென்று தாக்கும் வகையில், 2016 ஆண்டிற்குள் மேம்படுத்தப்படும் என
டி.ஆர்.டி.ஓ. தலைவர் சரஸ்வத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இரு நகரங்களில் இந்த ஏவுகணைகள் தயார் நிலையில் நிலைநிறுத்தப்படும் எனவும்,
அந்த இரு நகரங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.
இச்சோதனையில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் ஏவுகணைகளை
பயன்படுத்தி ஆறுமுறை சோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும், அதில் பூமியின்
வளிமண்டலத்திற்குள்ளும், வெளியிலும் சோதனை செய்யப்பட்டதாக சரஸ்வத்
தெரிவித்தார்.
மேலும் நீண்ட தூர ராடார் மற்றும் ஏவுகணை வழித்தட சாதனங்கள், நிகழ் கால
தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் வெற்றிகரமாக செயல்படுவதாக
தெரிவித்தார்.
|
ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை!
Related Posts :
Labels:
உலகம்