அம்பாறை பக்தயெல்ல, பியந்தல வனப்பகுதியில் நேற்று மலை ஏற்பட்ட தீ தொடர்ந்தும் பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இத் தீப்பரவலினால் சுமார் 300 ஏக்கர் வரையான வனப்பகுதி அழிந்து தீக்கிரையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக விமானப் படை மற்றும் கடற்படையின் உதவியை அம்பாறை பொலிஸார் நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


