கனடாவில் இணையதள குற்றங்கள் அதிகரிப்பு. ஆய்வில் அதிர்ச்சி தகவல்.


Cybercrime in Canada said to be skyrocketing
கனடாவில் இணையத்தள சைபர் குற்றங்கள் மளமளவெனப் பெருகி உச்சம் தொட்டுள்ளது சமிபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இணையத்தள வலைத்திருடர்களால் தாக்குதலுக்குள்ளாகும் கனடிய வலை சேவையகங்கள் ( Web Server ) சமீப காலமாகவே மிக அதிகமாகி வருகிறதென உலகம் முழுதிலும் உள்ள நாடுகளில் சைபர் குற்றங்களை ஒப்பிட்டு வரும் சான் டீகோவைச் சேர்ந்த வெப்சென்ஸ்   இன்க் (San Diego-based Websense Inc.) என்ற தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவில் உள்ள இணைய தள சேவை நிறுவனங்களால் வழங்கப்பட்டு வரும் தீய நோக்கம் கொண்ட இணையதளங்கள் அதிகரித்திருப்பதும் இதற்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.  முறையில்லாத மென்பொருள்களை அதிகமான மக்கள் பயன்படுத்துவதும் இதற்கு காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைபர் குற்றங்களில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்  முறையே   1. அமெரிக்கா ,  2. கனடா ,  3. எகிப்து,   4. ஜெர்மனி,   5. பிரான்ஸ்,  6. ரோமானியா ,  7. நெதர்லாந்து,    8. பிரித்தானியா,   9. ரஷ்யா , 10. இஸ்ரேல்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now