
அத்தியாவசியப்
பொருள்களின் விலை உயர்வைப் பற்றி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி என்று எனக்குத் தெரியும். இவ்வாறு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை
உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
பொருள்களின் விலை உயர்வு தேர்தலைப் பாதிக்கும் என்று நினைக்கவேண்டாம்.நீங்கள் சரியாக நடந்து, மக்கள் மனங்களை வென்றிருந்தால் விலை உயர்வுக்கு அச்சம் கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
பொருட்களுக்கான
விலைகள் இன்னும் உயரும். தேர்தலுக்காக பொருட்களின் விலைகளைக் குறைக்க
முடியாது. கிழக்கு மாகாணசபையை ஜூனில் கலைத்தே தீருவேன்.தேர்தல் திகதியை கிழக்கு முதலமைச்சருடன் பேச்சு நடத்தி தீர்மானிப்பேன்.
வடமத்திய மாகாணசபைத் தேர்தலை முற்கூட்டி நடத்தக் கூடாதென வடமத்திய மாகாண மேல் நீதிமன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.இது
தொடர்பாக ஆராய்ந்து வருகின்றேன். குறித்த இடைக்காலத் தடை உத்தரவை நீக்க
முடியுமா என்பது குறித்து பரிசீலிக்கப்படும். அங்கும் தேர்தல் நடக்கும்
என்றார் ஜனாதிபதி.