ஒண்டோரியோ: முன்னாள் பாதிரியார் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றங்கள். நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.


 Former priest, boy scout leader faces more sex charges
முன்னாள்  பாதிரியாரும், சிறுவர் சாரண தலைவருமான ரால்ப் ரோவ் மீது அடுக்கடுக்கான மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளது. வட மேற்கு ஒண்டோரியோவின் காவல்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்காக 72 வயதாகும்  ரால்ப் ரோவ் ஒண்டோரியோவின் கெனோரா பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரால்ப் ரோவ் மீது ஐந்து பாலியல் குற்றச்சாட்டுக்களும் , இரு துர் நடத்தை குற்றச்சாட்டுக்களும் பதிவாகியுள்ளன. 1973 முதல் 1986 வரையிலான கால கட்டங்களில்  கனடாவின் பூர்வ குடிமக்கள் வாழும் பகுதிகளான Fort Severn, Kitchenuhmaykoosib Inninuwug, Wunnumin Lake and Kingfisher Lake.ஆகியவற்றில் நடைபெற்ற பாலியல் குற்றங்களில் இவர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 1970 முதல் 1980 வரையிலான கால கட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் ரால்ப் ரோவ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now