கிழக்கில் முன்னாள் புலிகளின் கழுத்தில் இலக்கத் தகடு தொங்கவிடப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுகிறது

கிழக்கில் முன்னாள் புலிகளின் கழுத்தில் இலக்கத் தகடு தொங்கவிடப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுகிறதுமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னாள் விடுதலைப்புலிகளை பதியும் நடவடிக்கையானது மக்கள் மத்தியில் அச்ச உணர்வையும் நம்பிக்கையற்ற நிலையையும் உருவாக்கியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து இடை விலகியோர் பாதுகாப்பு தரப்பினரால் பதிவுசெய்யப்படும் நடவடிக்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக திடீர் திடீரென மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி புனர்வாழ்வு பெறாதவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என்றால் அதற்கென்று நடைமுறைகள் உள்ளன. மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் ஊடாக அது தொடர்பில் நடைமுறைகள் மேற்கொள்ள முடியும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியோர் பலர் இன்று தமது குடும்பத்தினருடன் எதுவித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாழ்துவரும் நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை அவர்களை அச்சமடையச் செய்துள்ளது.

சிவிலுடையில் வருவோரால் அவர்களின் குடும்ப விபரம் மற்றும் அவர்களின் முழு விபரங்கள் திரப்பட்டப்படுவதுடன் அவர்களின் கழுத்துகளில் இலக்க தகடு தொங்கவிடப்பட்டு புகைப்படமும் பிடிக்கப்படுகின்றன.

அண்மையில் இது தொடர்பில் எமது தலைவர் சம்பந்தன் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் கதைத்து திருமலையில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்ததுடன் இவ்வாறான நடவடிக்கைகள் ஏனைய மாவட்டங்களில் இனி மேற்கொள்ளப்படாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த உறுதிமொழிகள் மறக்கப்பட்டு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலத்த சந்தேகத்தை தமிழ் மக்கள் மனதில் தோற்றுவித்துள்ளன.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் அச்ச நிலையை போக்க அரசாங்கமும் படைத்தரப்பும் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now