

அளுத்கம மற்றும் தெற்கு களுத்துறைக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இந்த
வார இறுதியில் நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளுக்கு இடையிலான மார்க்கத்திலுள்ள மூன்று பாலங்கள்
புனரமைக்கப்படவுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ரயில்வே
போக்குவரத்து அத்தியட்சகர் எல்.ஏ.ஆர். ரத்நாயக்க தெரிவித்தார்.
இதற்கமைய எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்தறை முதல் அளுத்கம
வரையிலும் தெற்கு களுத்துறை முதல் கொழும்பு கோட்டை வரையிலும் ரயில்
போக்குவரத்து இடம்பெறவுள்ளது.