அவுஸ்திரேலியா அருகிலுள்ள பபுவா நியு கினி தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் போட் மோரெஸ்பியில் இருந்து 512 கி.மீ. தொலைவில் உள்ள நியூ பிரிட்டன் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6 ஆக பதிவான இந்த
நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. சுனாமி
எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்
நிலத்தட்டில் பபுவா நியு கினி அமைந்துள்ளது.
இங்கு 1998 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் 2,000 இற்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.