
ஜோர்தானில் பாதுகாப்பு இல்லமொன்றில் தங்கியுள்ள 200 இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து ஜோர்தான் அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என அமைச்சர் டிலான் பெரேரா கூறினார்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஜோர்தானுக்கு ஊழியர்களை அனுப்பாதிருக்க தீர்மானித்துள்ளது எனவும் ஆனால் ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இலங்கை தொடர்ந்தும் ஊழியர்களை அனுப்புகிறது எனவும் ரஞ்சன் ராமநாயக்க கூறினார்.