
இதனால் டுவென்டி-20 அணியின் புதிய கேப்டன்
பதவிக்கு சீனியர் வீரர்களான அப்ரிதி, சோயப் மாலிக் மற்றும் இளம் வீரர்
முகமது ஹபீஸ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் முகமது ஹபீஸ்
கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணியின்
கேப்டனாக மிஸ்பா நீடிக்கிறார்.இம்மாத இறுதியில் இலங்கை சுற்றுப்பயணம்
செய்யவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் இரண்டு
சர்வதேச டுவென்டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் டுவென்டி-20
தொடருக்கு ஹபீஸ் கேப்டனாக செயல்படுவார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட்
போர்டு (பி.சி.பி.,) தலைவர் ஜாகா அஷரப் கூறுகையில், பாகிஸ்தான்
கிரிக்கெட்டுக்கு மிஸ்பாவின் பங்களிப்பு நிறைய உள்ளது. எதிர்காலத்தை
கருத்தில் கொண்டு, டுவென்டி-20 போட்டிக்கு இளம் வீரரரை கேப்டனாக நியமிக்க
முடிவு செய்தோம். இதனால் முகமது ஹபீசை கேப்டனாக நியமித்துள்ளோம். டெஸ்ட்
மற்றும் ஒருநாள் அணிக்கு மிஸ்பா, தொடர்ந்து கேப்டனாக செயல்படுவார்,
என்றார்.