
இன்று (29) முன்வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ், பிணை கோரிக்கை தொடர்பில் எதிர்ப்பு இருக்குமானால் தெரிவிக்க சட்ட மா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார்.
2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி தொடக்கம் மே 1ம் திகதிவரையான காலப்பகுதியில் குறைந்த வயதுடையவராக இருந்த ரிஸானாவை சவுதிக்கு அனுப்ப உதவியமை, போலி ஆவணங்களை தயாரித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து மூன்று சந்தேகநபர்கள் மீதும் சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
மூன்று சந்தேகநபர்களில் இருவர் அண்மையில் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு வருட கடூழிய சிறையும் 60000 ரூபா தண்டமும் தண்டனையாக வழங்கப்பட்டது.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான தம்பிலேப்பை அப்துல் சலாம் தமது சட்டத்தரணி ஊடாக பிணை கோரியுள்ளார்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூன் 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதுவரையில் சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி சுனில் ராஜபக்ஷ் குறிப்பிட்டுள்ளார்.