ஐ.பி.எல் தொடரின் சாதனைகள் குறித்த ஒரு பார்வை


ஐ.பி.எல் 5 தொடர் நேற்றோடு முடிவடைந்தது. இத்தொடர் மட்டுமல்லாது அனைத்து ஐ.பி.எல் தொடர்களிலும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்த ஒரு பார்வை.
அதிக போட்டிகளில் விளையாடிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ் - 79.
ஆட்டநாயகன் விருது அதிக முறை வென்றவர் - கிறிஸ் கெய்ல்(12 முறை).
அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் - சென்னையின் பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா - தலா 62 போட்டிகள்.
நேர்மையான அணி விருதை அதிக முறை வென்ற அணி - சென்னை சூப்பர் கிங்ஸ்(3 முறை).
அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் - சுரேஷ் ரெய்னா (சென்னை) - 2181 ஓட்டங்கள்.
ஒரே தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் கிறிஸ் கெய்ல் - 733(2012).
பவுண்டரிகள் மூலம் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் மெக்கல்லம் - 118 ஓட்டங்கள்(2008).
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் - லசித் மலிங்கா (மும்பை இண்டியன்ஸ்) - 83 விக்கெட்கள்.
ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் வாரிக்கொடுத்தவர் வருண் ஆரோன் - 63 ஓட்டங்கள்(2012).
ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் குவித்த அணி ராஜஸ்தான்(58) - எதிர் பெங்களூர்(2009).
அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி - 2008 போட்டியில் பெங்களூரை 140 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது.
விக்கெட்டுகள் அடிப்படையில் பெரிய வெற்றி - 2008 போட்டியில் மும்பை இண்டியன்ஸை டெக்கான் சார்ஜர்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி சென்னை - 2010 போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக 246/5.
அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 முறை.
இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் - ராஜஸ்தான் றொயல்ஸ்(2008), டெக்கான் சார்ஜர்ஸ்(2009), சென்னை சூப்பர் கிங்ஸ்(2010, 2011), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(2012).
அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் - 2 முறை.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now