தேசிய
பாடசாலையொன்றிலிருந்து உயர்தரம் கற்பதற்காக வேறொரு தேசிய பாடசாலைக்கு
மாணவர்கள் அனுமதிக்கப்படுவதனை தடை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

எனினும் கஷ்ட பிரதேச தேசிய பாடசாலைகளில் விஷேட திறமைகளை வெளிக்காட்டுவோரும் தொழில் நிமித்தம் இடமாற்றம் பெறும் அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் மாத்திரமே இவ்வாறு தேசிய பாடசாலையொன்றிலிருந்து வேறு தேசிய பாடசாலைகளுக்கு அனுமதிக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு சகல தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளது.