தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்த்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில்
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து
வைக்கப்பட்டன.
இலங்கை பொதுச் சுகாதார சங்கத்தின் மட்டக்களப்பு கிளையும் மட்டக்களப்பு சுகாதார திணைக்களமும் மட்டக்களப்பு மாநகரசபையும் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
மட்டக்களப்பில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகமாகவுள்ள பகுதியான நாவற்குடாவில் இதன் முதல் கட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது வீடுகள், கடைகள், பொது கட்டிடங்கள், பாடசாலைகள் உட்பட பல்வேறு இடங்கள் சோதனைகளுக்கு உட்டுபத்தப்பட்டது.
நாவற்குடா பிரதேசத்தில் 244 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
டெங்கு நுழம்பு பெருக்கத்துக்கு ஏதுவான இடங்கள் என இனங்காணப்பட்ட ஆறு இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து டெங்கு நோயை கட்டுப்படுத்தும் தேசிய பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.தேவராசா தெரிவித்தார்.