
நியூயார்க்கில்
உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் அதிகாரியாக இருந்தவர் தேவஷிஷ் பிஸ்வாஸ்.
இவரது மகள் கிருத்திகா,18. இங்குள்ள குயின்ஸ் ஜான் பிரவுனி உயர்நிலை
பள்ளியில் படித்தார்.
கடந்த
ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பள்ளி ஆசிரியர்கள் இரண்டு பேருக்கு ஆபாச
எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாக, கிருத்திகா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை
தொடர்ந்து கிருத்திகா ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர்
பள்ளியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்திய
தூதரகத்தின் தலையீட்டின் பேரில் கிருத்திகா விடுதலை செய்யப்பட்டார். ஆபாச
எஸ்.எம்.எஸ்., சை கிருத்திகா அனுப்பவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
தவறாக தன் மீது குற்றம் சாட்டி ஒரு நாள் சிறை தண்டனை அனுபவிக்க காரணமாக
இருந்த பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், கல்வித்துறை, நியூயார்க் போலீஸ்
கமிஷனர், நியூயார்க் நகர நிர்வாகம் உள்ளிட்ட, 11 பேருக்கு எதிராக
கிருத்திகா மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூயார்க்கில் படிக்கும், 11 லட்சம் மாணவர்கள் கிருத்திகாவை போன்று
பாதிக்காமல் இருக்க, கிருத்திகாவுக்கு ஏழரை கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் என, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி பத்ரா, நியூயார்க்
கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள, 118 பக்க ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.