
ஆப்கானிஸ்தானில் நேட்டோ ராணுவம் நீடிப்பதற்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, சிகாகோவில் நேட்டோ மாநாடு நடத்த எதிர்ப்பு கிளம்பியது. எனவே, அங்கு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடந்து வருகின்றன.
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அதிபர் ஒபாமாவை கொல்ல சதி நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிகாகோவில் சதிகாரர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஒரு அப்பார்ட்மெண்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே, அங்கு முற்றுகையிட்ட போலீசார் நேட்டோ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது தேர்தல் பிரசாரத்தின்போது வாஷிங்டனில் வைத்து அதிபர் ஒபாமாவை கொல்ல சதி திட்டம் தீட்டியது தெரிய வந்தது.
மேலும், சிகாகோ நகர மேயர் ரக்ம் இமானுவேல், போலீஸ் நிலையம் மற்றும் ஒபாமா பாதுகாப்பு படையினரின் கார்களில் தாக்குதல் நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.
இதற்காக இவர்கள் 3 பேரும் தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை கைது செய்ததன் மூலம் அதிபர் ஒபாமாவை கொல்ல நடந்த சதி முறியடிக்கப்பட்டது.