வடக்கு தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல – கோதபாய ராஜபக்ஷ


வடக்கு தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வி யில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத் தின் போது சில பொதுமக்கள் உயிரிழந்தமையை மறுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தில் உயிரிழந்தவர்களில் பெருமளவானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்கப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெறவில்லை, புலிகளுக்கு எதிராகவே யுத்தம் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஆறாயிரம் இராணுப்படையினர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கத்தயார் எனினும், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
 
அப்பாவி பொதுமக்களை கொன்ற, ஹோட்டல்கள், முக்கிய வர்த்தக நிலையங்கள், பஸ்கள், ரயில்கள், சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்திய கொடூர பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாத செயற்பாடுகள் தடுத்து நிறு;தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பலவந்தமான காணாமல் போதல் தொடர்பில் வெளியாகும் புள்ளி விபரத் தரவுகள் தொடர்பிலும் சந்தேகம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்வதனை தடுக்மகும் நோக்கில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையில் முதலீடு செய்யக் கூடாது என்பதற்காக நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சட்டவிரோத கடத்தல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இனமத பேதமின்றி நாட்டின் அனைவருக்கும் இலங்கையில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடத் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
 
தெற்கில் தமிழர்கள் கடமையாற்றியதனைப் போன்று வடக்கில் சிங்கள முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு தேவையான சூழ்நிலை இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்திற்கு முன்னர் பெருமளவிலான சிங்களவர்கள் வடக்கில் கடமையாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அண்மையில் வடக்கின் முக்கிய நிர்வாக சேவைகளில் சிங்களர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையர் என்றால் நாட்டின் எந்தவொரு பாகத்திலும் சொத்துக்களை கொள்வனவு செய்யக் கூடிய உரிமை இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பலவந்தமான குடியேற்றங்கள் பற்றி தாம் குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி அனைவரும் நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now