இலங்கை அணி அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியா, நியூசிலாந்து,
பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே உள்ளிட்ட 11 வெளிநாட்டு சுற்றுப்
பயணங்களை உறுதியாகியுள்ளன. இதற்கு மேலதிகமாக 2012ஆம் ஆண்டு நடைபெறும்
20க்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகள் முக்கியமானவை.
11 சுற்றுப் பயணங்களுக்கான போட்டிகளுக்கு 125 மில்லியன் ரூபாவே
செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சுற்றுப் பயணத்திற்கு 11 மில்லியன்
ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு சுற்றுப் பயணத்திற்கு 25 – 30
மில்லியன் ரூபா செலுத்தியே அதனை ஒளிபரப்புவதற்கான உரிமம் பெறப்பட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தைப் பெறுவதற்கு குறைந்தது 50 –
60 மில்லியன் ரூபா செலுத்தப்படவேண்டும்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் நிஷாந்த ரணதுங்க, கால்ர்டன்
ஸ்போஸ்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பதவி வகிக்கிறார். இவரே
குறித்த நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை மோசடியான முறையில் மிகவும்
இரகசியமாக பெற்றுக்கொடுத்துள்ளார். இதனால் இலங்கை கிரிக்கெட் நிர்வாக
சபைக்கு 150 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திடமோ அல்லது கிரிக்கெட் போட்டிகளை
ஒளிபரப்பும் வேறெந்த தொலைக்காட்சி நிறுவனங்களிடமோ இந்த ஒப்பந்தத்திற்காக
விலை கேள்விமனுக்கள் கோரப்படவில்லை.

