105 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது.
எப்படி தெரியும்?: சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும். இம்முறையின்படி பார்க்கலாம்.
டெலெஸ்கோப் இருந்தால் அதன் மூலம் ஒளியை வெண்திரையில் பிடித்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம். தொலைநோக்கி, பைனாகுலர் மூலம் சூரியனை பார்க்க கூடாது. பார்த்தால் அந்நேரமே கண்கள் பாதிக்க வாய்ப்புள்ளன.
இது குறித்து இந்திய பேராசிரியர் குமாரசாமி கூறுகையில்,
"இந்நிகழ்வினால் பூமியில் பாதிப்பு ஏற்படாது. உரியினங்களுக்கும் பாதிப்பில்லை. ஜோதிடர்கள் இதுகுறித்து கூறும் கருத்துக்கள், செய்முறைகளை நம்ப வேண்டாம். இந்நிகழ்வை பாதுகாப்பான முறையில் பார்க்கலாம்,´´ என்றார்.