இலங்கை வைத்தியசாலைகளில் 70 வீதமான நோயாளர் மரணங்கள், தொற்றா நோய்களின் மூலமே ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் நாள் ஒன்றிற்கு 950 - 1000 வரையான மரணங்கள் பதியப்படுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்தார்.
தொற்றா நோய்கள் நாட்டின் சுகாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை விளைவிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
சுகாதார அமைச்சின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் என்பவற்றுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது பாலித்த மஹிபால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.