தங்களது பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாக அரசாங்கம் இதுவரை 60 கோடி ரூபா
நட்டத்தை எதிர்கொண்டுள்ளதென அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க மகா சம்மேளம்
தெரிவித்துள்ளது.
நேற்று (13) வெற்றிகரமாக 6ம் நாள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டதாகவும் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்வதாகவும் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால குறிப்பிட்டார்.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என அவர் எச்சரித்துள்ளார்.
எனினும் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பு தொழில் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ள போதும் அரச பணத்தை வீணடிக்கும் வகையில் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என உயர்கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.