சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின்(ஐ.சி.சி) டி20 உலகக் கிண்ண போட்டி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த
டி20 உலகக் கிண்ண சுற்றுப் போட்டிக்கான அதிகாரபூர்வ தூதுவராக இலங்கை
அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அறிவித்துள்ளது.
29
வயதான லசித் மலிங்கா, இலங்கை அணியின் முக்கிய பந்துவீச்சாளராவார்.
குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இவர் அணியின் மிக முக்கிய
வீரராக விளங்குகிறார்.
ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய மலிங்கா 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும், ஐ.சி.சி டி20 உலகக் கிண்ண சுற்றுப்போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.