Firefox சில் உள்ள பிழைகளை நீக்கி வேகமாக இயங்க வைக்க - Reset Firefox

ஒரு மென்பொருளை தொடர்ந்து உபயோகப்படுத்தி கொண்டிருக்கும் பொழுது அதன் வேகம் குறைவது இயல்பு தான். இன்ஸ்டால் செய்யும் பொழுது இருந்த வேகம் நாளடைவில் குறைந்து விடும். இது உலவிகளுக்கும் பொருந்தும் இந்த வகையில் நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்களா? ஆரம்பத்தில் இருந்த வேகம் படிப்படியாக குறைந்து இப்பொழுது பயர்பாக்ஸ் உலவி நிதானமாக இயங்குகிறதா? அடிக்கடி கிராஷ் ஆகிறதா? இந்த பிரச்சினைகளை நீக்கி மீண்டும் பயர்பாக்ஸ் உலவியை பழைய வேகத்தில் இயங்க வைக்க வேண்டுமா? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது. பயர்பாக்ஸின் புதிய Reset Firefox வசதியை பயன்படுத்தி பயர்பாக்ஸ் உலவியை புதியது போல மாற்றலாம் வாருங்கள்.
எச்சரிக்கை: Reset Firefox வசதியை பயன்படுத்துவதால் உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் சேமித்து வைத்துள்ள Bookmarks, Cookies, Passwords, History அனைத்தும் அழிந்து விடும். ஆகவே உங்களுக்கு அந்த விவரங்கள் ஏதும் தேவையில்லை என்றால் தொடருங்கள். 
முதலில் பயர்பாக்ஸ் உலவியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Help - Troubleshooting Informations பகுதிக்கு செல்லுங்கள். 
உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Reset Firefox  என்ற ஒரு பட்டன் இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள். அடுத்த விண்டோவில் உங்களின் இறுதி அனுமதியை கேட்கும் அதில் உள்ள Reset Firefox என்ற பட்டனை அழுத்தவும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய உலவியில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு புதிய பிரவுசர் தயாராகி விடும். இப்பொழுது பிரவுஸ் செய்து பாருங்கள் பழைய வேகத்திற்கும் இப்பொழுது உள்ள வேகத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now