சம்பளக் கொடுப்பனவு உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து 24 மணிநேர
பணிப்பகிஷ்கரிப்பை நடத்த இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்க
சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
ஜூலை மாதம் 4ம் திகதி குறித்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
நேற்று (06) நடைபெற்ற இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகளை அரசு கண்டுகொள்ளாதிருப்பதால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் இருப்பதாகவும் அதனால் உரிய தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.