லண்டனில்
நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியை இணையதளத்தின் மூலம் உலகத்திலுள்ள
ரசிகர்கள் அனைவரும் காணலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் வாரியம் (ஐஓசி)
அறிவித்துள்ளது.
ஒலிம்பிக்
போட்டியை மட்டுமின்.றி அதன் சிறப்புக் கூறுகளையும் (ஹைலைட்ஸ்)
இணையதளத்தின் மூலம் கட்டணமின்றி பார்க்கமுடியும். இதற்காக சர்வதேச
ஒலிம்பிக் வாரியம் "யூடியூப் சேனல்” ஒன்றையும் தொடங்கியுள்ளது.
இதில்
ஒலிம்பிக் குறித்த தகவல்கள், போட்டி முடிவுகள், கடந்த ஒலிம்பிக் போட்டிகள்
குறித்த செய்திகள் 24 மணி நேரமும் வெளியாகிக் கொண்டிருக்கும் என்று
சர்வதேச ஒலிம்பிக் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் யூலை 27 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடி ஒளிபரப்பிற்கான இணையதள முகவரி:http://www.youtube.com/user/olympic